பெயரில் மட்டும் பாப்புலர் இல்லாமல் நிஜமாகவே மிகவும் பாப்புலாரான எங்கள் சகோதரர், இணையத்தில் பலருக்கும் அண்ணனாக திகழ்ந்து வருகிறார்.ஆர்குட் சமூக வலைதளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை தனது நட்பு பட்டியலில் வைத்துள்ளார் என்பது இன்னொரு சிறப்பு.

அனைவரிடம் பாரபட்சமில்லாமல் அன்பு காட்டுவதில் இவருக்கு நிகர் இவராக மட்டுமே இருக்கமுடியும்.அந்த அளவுக்கு எல்லாரிடமும் இனிமையாக பழகக்கூடியவர்.பாசத்தில் நம்மை கட்டிபோட வித்தைகள் பல தெரிந்தவர்.

வலையுலகம் கொடுத்த அருமை அண்ணன் !
அன்பு காட்டுவதில் வள்ளல் !
அரவணைப்பில் அன்னை இவர் !
அறிவுரையில் ஆசான் இவர் !
அன்பு என்ற மந்திர கோலை சுழற்றும் வித்தைக்கு அரசன் இவர் !
தாய் தமிழை போன்று என்றும் இனியவர் இவர் !


இவர் பாசத்தால் என்றும் கட்டுண்டு இருக்கும் பாசக்கூட்டணி... இது பாப்புலர் கூட்டணி...!

என்னோடு உடன்பிறக்கவில்லையே தவிர என் அண்ணனாய் வீற்றிருக்கும் பாசத்துக்குரிய சுந்தர் அண்ணனுக்கு என் அன்பின் சிறிய பரிசு இந்த குழுமம்.நீங்களும் என்னை போல அண்ணனின் அன்பில் ஈர்க்கபட்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.நீங்களும் இணையுங்கள் பாப்புலர் சுந்தர் பாசறையில்...

ICE DIGITALS

O+

CBI Shivan